AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் தலை,காது,மூக்கை தனியாக வெட்டினோம்.. சதையை அறுத்து வேக வைத்தோம்.. கூடுவாஞ்சேரி கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Woman Body In Suitcase : சூட்கேஸில் பெண் உடல் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர். இதில், பெண் கண்,காது,மூக்கை தனியாக வெட்டி எடுத்து, தோலை உரித்து டபராவில் வைத்து வேக வைத்து, எலும்புகளை சூட்கேஸில் வைத்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

பெண் தலை,காது,மூக்கை தனியாக வெட்டினோம்.. சதையை அறுத்து வேக வைத்தோம்.. கூடுவாஞ்சேரி கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
கொலையாளிகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 01 Sep 2026 07:43 AM IST

சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்த ஹியாத்துன் நிஷா ( 38 வயது) என்பது தெரிய வந்தது. இவரை, வெளி மாநிலத்தை சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் ( 22 வயது), அவரது மனைவி பகாபதி மாஜி ( 21 வயது) ஆகியோர் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து டெல்லி ரயிலில் விட்டு சென்றதும், மீதமுள்ள உடல் பாகங்களை வீட்டில் பிரியாணி டபராவில் வைத்து வேக வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் ஒடிசாவில் போலீசார் கைது செய்தனர்.

ஒரே வீட்டில் வசித்து வந்த மூவர்

அவர்களிடம் கொலை சம்பவம் குறித்து போலீசார் 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரித்ததில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. இதில், ஒடிசாவை சேர்ந்த ஹியாத்துன் நிஷா தாம்பரத்தில் பணிபுரிந்த போது, மாணிக உத்தின் லஸ்கர், பாகாபதி மாஜி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் மூவரும் கூடுவாஞ்சேரி பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே, ஹியாத்துன் நிஷா 2 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால், தன்னை திருமணம் செய்து யாகொள்ளுமாறு மாணிக் உத்தினிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கருவை கலைக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: சைலண்ட் கில்லரான கார் ஏசி.. ராணிப்பேட்டையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. தூக்கத்தில் பிரிந்த ஓட்டல் மேலாளர் உயிர்!

பெண் கண், காது, மூக்கை வெட்டி எடுத்து தோலை உரித்தனர்

இதில், ஏற்பட்ட தகராறில் ஹியாத்துனை, மாணிக் மற்றும் பாகாபதி கொலை செய்து போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூப் மூலமாக வீடியோக்களை பார்த்து, அதில் ஹியாத்துன் உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். மேலும், அவரின் தலையை மொட்டை அடித்து, கண், மூக்கு காது ஆகியவற்றை தனித்தனியே எடுத்துள்ளனர். அத்துடன், உடலின் சதை பகுதியை கத்தியால் தனியாக உரித்து அதை பிரியாணி டபராவில் போட்டு வேக வைத்துள்ளனர். அத்துடன் 14 லிட்டர் வினிகர் மற்றும் சில வேதிப்பொருட்களை கலந்து, காற்று புகாமல் இருப்பதற்காக பாத்திரத்தை மூடி, மைதா மாவு கலவையால் பூசி உள்ளனர்.

எலும்புகளை ரயிலில் அனுப்பிய தம்பதி

பின்னர், அவரது எலும்புகளை மட்டும் தனித்தனியாக பிளாஸ்டிக் பைகளில் கட்டி சூட்கேஸில் வைத்து டெல்லி ரயிலில் அனுப்பி உள்ளனர். இந்த கொடூரமான வேலைகளை செய்து முடிக்க 24 மணி நேரத்துக்கு மேலாக செலவிட்டுள்ளனர். இந்த விவரங்களை போலீசாரின் விசாரணையில் மாணிக், அவரது மனைவி பாகமதி வாக்குமூலமாக அளித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை 6 நாட்கள் போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Follow Us