சைலண்ட் கில்லரான கார் ஏசி.. ராணிப்பேட்டையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. தூக்கத்தில் பிரிந்த ஓட்டல் மேலாளர் உயிர்!
Ranipet Restaurant Manager Dies : ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரில் ஏசியை இ யக்கியவாறு தூங்கிய தனியார் உணவகத்தின் மேலாளர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . இந்தச் சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் காரில் ஏசியை இயக்கியவாறு தூங்கிய தனியார் உணவகத்தின் மேலாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் முரளி ( 42 வயது). ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்த இவர் சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், வாலாஜாபேட்டையில் வசித்து வரும் தனது தந்தையே பார்ப்பதற்காக உணவாக மேலாளர் முரளி தனது காரில் சென்றுள்ளார். அங்கு, காரை நிறுத்தி விட்டு ஏசியை ஆன் செய்து விட்டு முரளி மட்டும் காரில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. வெகு நேரம் ஆகியும் முரளி காரை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை காரை திறந்து பார்த்துள்ளார்.
காரில் மூச்சு திணறி உயிரிழந்த மேலாளர்
அப்போது, காரின் உள்ளே முரளி மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் முரளியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேலாளர் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முரளியின் மனைவி பிரியா வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: நள்ளிரவில் பகீர் சம்பவம்.. நாமக்கல்லில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் கொள்ளை!




காரில் ஏசியை இயக்கி தூங்கியதால் விபரீதம்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முரளி காரின் உள்ளே ஏசியை ஆன் செய்தவாறு தூங்கி உள்ளார். இதனால், ஒரே இடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏசி போட்டு தூங்கியதால் காரின் புகையில் வரும் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு காருக்குள் நுழைந்துள்ளது. இதனால், முரளிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இருப்பினும், அவரது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து தனது தந்தையை பார்ப்பதற்காக வாலாஜாபேட்டைக்கு வந்திருந்த தனியார் ஹோட்டல் மேலாளர் காரில் ஏசி போட்டு தூங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம்.. சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!