அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!
Maternity Leave For Female Government Employees : தமிழகத்தில் 3- ஆவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் 3- ஆவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறையை 365 நாளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2- க்கும் குறைவான குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களும், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற திருமணம் ஆன அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமலும் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்த விடுப்பானது தற்போது ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 18- ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, மனித வள மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது, துறை ரீதியான கோரிக்கைகளை அமைச்சர் சரத்குமார் மக்கள் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
12 வாரங்களில் இருந்து 362 நாளாக விடுப்பு உயர்வு
இதில், தமிழக அரசில் பணிபுரிந்து வரும் திருமணம் ஆன பெண் ஊழியர்கள் 3- ஆவது குழந்தை பெறும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசியலில் 3- ஆவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 365 நாளாக ( ஓராண்டு) உயர்த்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் இலவச வேட்டி, சேலையில் அதிரடி மாற்றம்.. மக்கள் வியக்கும் வகையில் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!




தமிழக அரசு வெளியிட்ட அரசாணை
தமிழகத்தில் அரசு பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் இரண்டு குழந்தைகளுடைய அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது
விடுப்பு காலத்தை தேர்வு செய்யும் வசதி
இந்த நிலையில் தான், 3- ஆவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெறுப்பு காலமானது பிரசவத்துக்கு முந்தைய ஓய்வு மற்றும் பிந்தைய காலம் என பிரித்துக் கொள்ளும் வசதி பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நள்ளிரவில் பகீர் சம்பவம்.. நாமக்கல்லில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் கொள்ளை!