அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை.. உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் – கே.என்.நேரு
இதுவரை அவை உரிமை மீறல் குழு அமைக்கப்படவில்லை. எனவே, இது குறித்து பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கே.என். நேரு வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர், இந்த வார இறுதியில் அனைத்து சட்டப்பேரவை குழுக்களையும் அமைப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 31, 2026: சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிடுவது குறித்து அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய கே.என்.நேரு, இரண்டு விவகாரங்கள் குறித்து அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் நிலையில், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகள் ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன.
அவை உரிமை மீறல் குழு – தீர்மானம் கொண்டு வர வேண்டும்:
இது தொடர்பாக இதுவரை அவை உரிமை மீறல் குழு அமைக்கப்படவில்லை. எனவே, இது குறித்து பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர், இந்த வார இறுதியில் அனைத்து சட்டப்பேரவை குழுக்களையும் அமைப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அப்போது அவை உரிமை மீறல் குழுவும் அமைக்கப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து குழுவில் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: பொங்கல் இலவச வேட்டி, சேலையில் அதிரடி மாற்றம்.. மக்கள் வியக்கும் வகையில் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!
சட்டமன்ற உற்ப்பினர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்:
மேலும் பேசிய சபாநாயகர், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதன் மூலம் பொதுமக்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியலுடன் தொடர்பில்லாத இளம் பெண்கள் குழுவினர், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பைப் பார்த்து அரசியல், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. எந்தெந்த மாவட்டத்திற்கு நியமனம்!
மேலும், பேரவையில் உறுப்பினர்கள் பேசும் கருத்துகளில் எவை அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும், எவை நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களும் கவனமாக சிந்திக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
உரிய முறையில் பரிசீலிக்கப்படும் – சபாநாயகர் உறுதி:
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்பாக பொதுமக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.