AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் போட்டியாளர்கள் குறிறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ
நடிகை ஹேமாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 19:12 PM IST

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் மட்டும் இன்றி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி முதல் இறுதியாக ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வரை தொடர்ந்து பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு மக்களிடையே பல விமர்சனங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் தொடர்ந்து 7 சீசன்கள் வரை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து 8 மற்றும் 9 சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு சீசனிலும் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வது போல முதல் சீசன் முதல் சாதாரண மக்களும் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் காமனர் நிகழ்ச்சி நடத்தி இந்த 10-வது சீசனில் 3 பேர் காமனர்களாக உள்ளே செல்கிறார்கள். அவர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதி செய்த சீரியல் நடிகை:

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் நடிகை ஹேமா சூசகமாக வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்டுள்ளார். முன்னதாகவே சீரியல் நடிகை ஹேமா பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் ஓம் பட ரிலீஸில் பிரச்சனை? இணையத்தில் வைரலாகும் தகவல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமாவின் வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by MangaiUtsavam (@mangaiutsavam)

Also Read… வெறும் 10 நாட்களில்.. நிவின் பாலி – மமிதாவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Follow Us