AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குக் வித் கோமாளி சீசன் 7 வின்னர் & ரன்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகின்றது. அதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வின்னர் மற்றும் ரன்னர் யார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

குக் வித் கோமாளி சீசன் 7 வின்னர் & ரன்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
குக் வித் கோமாளி சீசன் 7 Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2026 11:31 AM IST

தமிழ் சினிமாவை பொருத்தவரை வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைப்பது போல தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை என்றால் சீரியல்கள் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்று காமெடியை மையமாக வைத்து வெளியாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 7-வது சீசனும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி முதல் 6 சீசன்களில் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் யார் யார் என்றால், வனிதா விஜயகுமார், கனி திரு, ஷ்ருதிகா, மைம் கோபி, பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜூ ஜெயமோகன் ஆகிய 6 பேர் வெற்றியடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் யார் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

குக் வித் கோமாளி சீசன் 7 வின்னர் & ரன்னர் யார் தெரியுமா?

முன்பு 6 சீசன்களில் இல்லாத ஒன்றாக இந்த சீசனில் கணவன் – மனைவியாக போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் 4 போட்டியாளர்கள் இருக்கும் போது அவர்களை முந்தைய சீசன்களில் ரன்னர்களாக உள்ள போட்டியாளர்களும் போட்டிப் போட வைத்தனர். இதில் தற்போது உள்ள சீசனில் இருந்து இறுதிப் போட்டியாளர்களாக சம்யுக்தா மற்றும் சித்து இருவரும் தேர்வாகி உள்ளனர். முந்தைய சீசன்களில் இருந்து இவர்களுடன் உமைர் மற்றும் ஷபானா போட்டியிருகின்றனர். இவர்களின் 4 பேருக்கும் நடைப்பெற்ற போட்டியில் இந்த சீசன் 7 வெற்றியாளராக சம்யுக்தா தேர்வாகி உள்ளார். மேலும் இரண்டாம் பரிசை ஷபானா பெற்றுள்ளார். இவர் கடந்த 6-வது சீசனிலும் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த அடையாளத்த தக்கவச்சுக்க… வெளியானது நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் கிளிம்ஸ் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Follow Us