அந்த அடையாளத்த தக்கவச்சுக்க… வெளியானது நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் கிளிம்ஸ் வீடியோ
King 100 movie glimpse video | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடபடும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகி உள்ள கிங் 100 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் நாகர்ஜுனாவின் இரண்டு மகன்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் போதும் தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நாகர்ஜுனா. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகினது. மேலும் தெலுங்கு சினிமாவில் நாகர்ஜுனாவின் நடிப்பில் அதிக அளவில் படங்கள் வெளியாகி வந்தாலும் தொடர்ந்து இவர் தமிழ் உட்பட மற்ற பான் இந்திய மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். அதன் காரணமாகவே இவருக்கு பான் இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் நாகர்ஜுனாவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் நாகர்ஜுனாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கிங் 100. இந்தப் படத்தை இயக்குநர் ரா கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை இயக்கி உள்ள நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகர்ஜுனாவை வைத்து படத்தை இயக்கி உள்ளார்.
வெளியானது நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் கிளிம்ஸ் வீடியோ:
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற டிசம்பர் மாதம்24-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி? இயக்குநர் ஓபன் டாக்
நடிகர் நாக சைத்தன்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Our king is on fire ! Happy birthday to you Naana @iamnagarjuna . Absolutely love the glimpse , so happy seeing you in your element ❤️ what a kick off to the film #KING100 #HBDKingNagarjuna https://t.co/QNC0Xdlbiw#LongLiveTheKing
Thank you to the team for this . A big… pic.twitter.com/nSVTWL0YXK
— chaitanya akkineni (@chay_akkineni) August 29, 2026
Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்



