சூர்யாவின் 47வது படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
Suriya 47 Title Teaser Update: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துவரும் ஆக்ஷன் காமெடி படம்தான் சூர்யா47. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இன்னும் டைட்டில் என்ன என அறிவிக்கப்படவில்லை. அந்த விதத்தில் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சூர்யா (Suriya) நடித்துவரும் புதிய திரைப்படம்தான் சூர்யா47 (Suriya47). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கியுள்ளார். இவர் நடிகர் ஃபகத் ஃ பாசில் நடித்திருந்த ஆவேஷம் என்ற திரைப்படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர் இவர். சூர்யாவின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் சிறப்பாக தொடங்கிய நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துள்ளார். இவர்கள் காம்போ இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் இப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இதன் டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது எப்போது வெளியாகும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அரசன் படம் இந்த ஆண்டு ரிலீஸாகாதா? வைரலாகும் தகவல்
சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சூர்யா47 திரைப்படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது:
நடிகர் சூர்யா மற்றும் ஜித்து மாதவனின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க, மிக பிரம்மாண்டமாக பாடல்கள் உருவாகியுள்ளதாம். அந்த விதத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் 2026ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படுவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்த அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது உங்களுக்கான ஒரு விருந்து.. டாக்ஸிக் திரைப்படம் பற்றி பகிர்ந்த யாஷ்!
சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
BUZZ – #Suriya47 title is said to be unveiled during Vinayagar Chaturthi. It’s said to be a normal title, but the movie in which #Suriya plays a police officer will showcase him in a fun yet most mass avatar 🔥 with a great mass transformation in it.
Planning for a Diwali 2026… pic.twitter.com/gH7Gz54KO9
— Movies Singapore (@MoviesSingapore) August 25, 2026
சூர்யா47 பட ரிலீஸ் எப்போது:
இந்த சூர்யா47 படத்தில், நடிகர் சூர்யா நகைச்சுவை மற்றும் நெகடிவ் கதாபாத்திரத்துடன் கொஞ்சம் காமெடியான வேடத்தில் நடித்துள்ளாராம். அவருடன் நடிகர் நஸ்லென் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். இப்படத்திற்கு கலாட்டா மற்றும் சரவெடி என டைட்டில் இருப்பதாக ஒவ்வொரு டைட்டிலாக இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



