Ravi Mohan: அது எனக்கு கம்பேக் படமாக அமையும் என நம்புகிறேன் – ரவி மோகன்!
Ravi Mohan comeback Movie: தமிழ் சினிமாவில் சுய வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களை கடந்து, சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் புது புது படங்கள் உருவாகிவரும் நிலையில், சினிமாவில் தனக்கு கம்பேக்காக அமையும் திரைப்படம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரவி மோகன் வில்லனாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இப்படம், 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பின், ரவி மோகனின் நடிப்பில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் உருவாகிவருகிறது.
அந்த விதத்தில் இவரே இயக்குநராகவும் அன் ஆர்டினரி மேன் (An Ordinary Man) என்ற படத்தை இயக்க, யோகி பாபு ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும் ரவி மோகனும் ஹீரோவாக புதிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய ரவி மோகன், தனக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: மலை வாழ் மக்களின் வாழ்க்கையை காட்டும் மேற்குத் தொடர்ச்சி மலை படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது
தனக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படம் என்ன என்பது குறித்து பேசிய ரவி மோகன்:
அந்த பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய ரவி மோகன், “கராத்தே பாபு திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இது எனக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என நம்புகிறேன். என் அண்ணா மோகன் ராஜா தற்போது கார்த்தியின் படத்தில் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே வாரத்தில் வெளியாகும் நயன்தாராவின் இரு படங்கள் என்னென்ன தெரியுமா?
தனி ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இணையாக நடைபெற்று வருகின்றன. கார்த்தி படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல செய்தியுடன் வருவோம் என நம்புகிறேன். மேலும், எனது முதல் இயக்கப் படம் மற்றும் ப்ரோ கிளப் படப்பிடிப்பும் இணையாக நடைபெற்று வருகிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை நேர்காணலில் ரவி மோகன் பேசியது தொடர்பாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Ravimohan at Recent Press Interaction:
“#KaratheyBabu is ready for release. New release date will be announced soon. I was very happy with Film’s output. Hopefully it’ll be a comeback for me🔥. My Anna #Mohanraja currently working on #Karthi‘s film. #ThaniOruvan2 writing is… pic.twitter.com/tk0XmGxwTm— AmuthaBharathi (@CinemaWithAB) August 24, 2026
நடிகர் ரவி மோகன் தற்போது ப்ரோ கிளப் மற்றும் அன் ஆர்டினரி மேன் என்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிவருகிறார். இயக்குநர் மோகன் பாபுவின் இயக்கத்தில், இவர் நடித்துள்ள அரசியல் திரைப்படம்தான் கராத்தே பாபு. இந்த படம் ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் ரவி மோகன் அப்டேட் கொடுத்துள்ளார்.