மலை வாழ் மக்களின் வாழ்க்கையை காட்டும் மேற்குத் தொடர்ச்சி மலை படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது
8 Years Of Merku Thodarchi Malai Movie | தமிழ் சினிமாவில் மலை வாழ் மக்களின் வாழ்க்கையை மையமா வைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் மேற்குத் தொடர்ச்சி மலை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் வேலையிலேயே சின்ன சின்ன பட்ஜெட்களில் அறிமுக நடிகர்களை வைத்து வெளியாகும் மிக ஆழமான கதைகள் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் லெனின் பாரதி எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. இந்தப் படத்தினை நடிகர் விஜய் சேதுபதி பிரபல தயாரிப்பு நிறுவனங்களான விஜய் சேதுபதி புரடெக்ஷன் மற்றும் ட்ரீம் ட்ரி புரடெக்ஷன் ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் படத்தை தயாரித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வளையங்குளம், அந்தோணி வாத்தியார், சொர்ணம், ஆறுபாலா, எம்.எஸ். லாய், ஊது ராசா, தேவாரம் சொர்ணம், கோடாங்கிபட்டி மொக்கத்தாயி, பல்லவராயன் பட்டி பாண்டி, வனராஜ், மாஸ்டர் ஸ்மித் மற்றும் தேனி ஈஸ்வர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேற்குத் தொடர்ச்சி மலை படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது:
மலை அடிவாரத்தில் வாழும் மக்களுக்கு மலையை பார்க்கும் போது அதோட அழகு மட்டுமே கண்ணுக்கு தெரியும். ஆனால் மலை வாழ் மக்களுக்குதான் அந்த மலையில் உள்ள பிரச்சனைகளும் சிரமங்களும் தெரியும். அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியான படம் மேற்குத் தொடர்ச்சி மலை படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“மேற்குத் தொடர்ச்சி மலை” — 8 ஆண்டுகள்!
மலைகளின் அழகை மட்டும் காட்டாமல், அந்த மலைகளோடு வாழ்ந்த மனிதர்களின் வலி, உழைப்பு, கனவு, வாழ்க்கை என அனைத்தையும் எந்தவித அலங்காரமும் இல்லாமல் திரையில் பதிவு செய்த படைப்பு.@leninbharathi1 இயக்கத்தில், விஜய் சேதுபதி தயாரிப்பில், இளையராஜாவின்… pic.twitter.com/IurJE4S60v— cinema cinema (@kailashsatana) August 24, 2026