AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arjun Das: வெட்டு.. குத்து.. ரத்தம் இல்லாத படம்.. ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்!

Arjun Das on Once More: அர்ஜுன்தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள புத்தம் புது காதல் திரைப்படம்தான் ஒன்ஸ் மோர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகிறது. சமீபத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ஜுன்தாஸ், ஒன்ஸ் மோர் படம் எவ்வாறு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Arjun Das: வெட்டு.. குத்து.. ரத்தம் இல்லாத படம்.. ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்!
அர்ஜுன் தாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2026 17:55 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அர்ஜுன்தாஸ் (Arjun Das). இவரின் நடிப்பில் தமிழ் மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கான் சிட்டி (Con City). இந்த திரைப்படமானது, கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தக நிலையில், இதற்கு பின்னும் பல படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். அதில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் (Vignesh Srikanth) இயக்கத்தில் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஒன்ஸ் மோர் (Once More). இதில் அர்ஜுன்தாஸ் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் (Aditi Shankar) மற்றும் சோனா ஒலிக்கல் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த படம் பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (22/08/2026) இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அர்ஜுன்தாஸ், ஒன்ஸ் மோர் எப்படிப்பட்ட படம் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

ஒன்ஸ் மோர் திரைப்படம் எப்படிப்பட்ட படம் என்பது குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் தாஸ், “இந்த ஒன்ஸ் மோர் படம் மிகவும் தூய்மையான, அழகான, உண்மைத்தனம் மற்றும் எமோஷ்னலான படம். இப்படமானது யதார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான நாடகம். என்னிடம் தம் மற்றும் சரக்கு இல்லாமல் எப்போது ஒரு திரைப்படம் நடிக்கப்போகிறீர்கள் என கேட்டார்கள். மேலும் தியேட்டர் ஒன்றிற்கு போனபோது, வயதான அம்மா ஒருவர் என்னிடம் சொன்னார், இந்த வெட்டு குத்து… கத்தி இல்லாமல் ஒன்று படம் பண்ணுங்கன்னு சொன்னாங்க.

இதையும் படிங்க: சர்தார் படத்திற்கு அவர் கொடுத்த பாராட்டு… நெகிழ்ச்சியாக பேசிய இயக்குநர்

இது அந்த அம்மாக்களுக்கான படம். மேலும் குடும்பத்தில் உள்ள பலரும் என்னிடம் சொன்னார்கள், ஒரு லவ் படம் பண்ணலாம் என்று, அப்படிப்பட்ட ஒரு தூய்மையான படம். எந்தவித கெட்ட வார்த்தைகள் இல்லாமல், பெண்களுக்கு மாறியதாகிய கொடுக்கும் படமாக இந்த ஒன்ஸ் மோர் திரைப்படம் இருக்கும்” என அதில் அர்ஜுன் தாஸ் தெரிவித்திருந்தார்.

ஒன்ஸ் மோர் திரைப்படம் பற்றி அர்ஜுன் தாஸ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்ட படமாக அமைந்துள்ளது. இந்த படமானது பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், அதன் மீது ஆர்வம் அதிகரித்துவருகிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us