ஜன நாயகன் படத்தில் அந்த காட்சியை வைத்ததற்கு நன்றி – சின்மயி
Chinmayi praised Jana Nayagan movie | தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறுபவர் பாடகி சின்மயி. இவர் சமீபத்தில் ஜன நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். தளபதி விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பே இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. பிறகு தேர்தல் முடிந்து தளபதி விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொருப்பு ஏற்ற பிறகே ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் பல காட்சிகள் அந்தப் படத்திற்கும் ஜன நாயகன் படத்திற்கு வித்யாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ள ஜன நாயகன் படத்தைப் பார்த்த பாடகி சின்மயி பார்த்துவிட்டு தனது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




ஜன நாயகன் படத்தில் அந்த காட்சியை வைத்ததற்கு நன்றி:
நான் ‘ஜனநாயகம்’ (Jananayagan) திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் மற்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு குறிக்கோள் குறித்து இங்கே பகிர விரும்புகிறேன்; அதுதான் குழந்தைகளைச்a பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதும், அது தொடர்பான விவகாரங்களில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஆகும் (நம்பிக்கையைத் தவிர வேறு என்னதான் நம்மிடம் இருக்கிறது?).
நடிகர் விஜய் போன்ற ஒரு பெரும் நட்சத்திரமும், தற்போது தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகவும் இருப்பவர், அப்படத்தில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசியது மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான ஒன்றாகும். அந்தக் காட்சிக்காக இயக்குனர் H. வினோத் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Arjun Das: விஜய் சாருக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருப்பதே எனக்கு தெரியாது – அர்ஜுன் தாஸ்!
சின்மயி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
I got to watch Jananayagan.
I do want to share about the one thing that was most important to me and the cause that I stand for – safety for children from sexual abuse and swift action (I still wish coz what else do we have except hope?)
A star the stature of @actorvijay and…
— Chinmayi Sripaada (@Chinmayi) August 22, 2026
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி