ஜன நாயகன் முதல் சென்னை லவ் ஸ்டோரி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் என்ன படம் ஓடிடியில் பார்க்கலாம்!
This Week OTT Release Movies List Here | ஒவ்வொரு வாரமும் இந்திய மொழிகளில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அதே போல ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படம்: தளபதி விஜய் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படம் தளபதி விஜய் முதல்வராக ஆவதற்கு முன்பு இறுதியாக நடித்தப் படம் ஜன நாயகன். இந்தப் படம் தான் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்று அவரே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கி இருந்தார். இந்த ஜன நாயகன் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், ரேவதி, கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
டார்க் படம்: க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த டாக் படத்தை இயக்குநர் கல்யான் கே ஜெகன் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் அஜய் கார்த்தி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சனா நேத்ருன் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து கே.பாக்யராஜ், நட்ராஜ் சுப்ரமணி (நட்டி), சிபி சக்ரவர்த்தி, அரவிந்த், விடிவி கணேஷ், ஷாகுல், நரேன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது பிரைம் வீடியோவிலும் சிம்பிளி சௌத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பியார் பிரேமா கல்யாணம் படம்: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் இளன். இவர் தற்போது இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் பியார் பிரேமா கல்யாணம். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள நிலையில் படம் தற்போது நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




சென்னை லவ் ஸ்டோரி படம்: இயக்குநர் ரவி நம்புரி எழுதி இயக்கி தெலுங்கு சினிமாவில் வெளியான படம் சென்னை லவ் ஸ்டோரி. இந்தப் சென்னை லவ் ஸ்டோரி படத்தில் நடிகர் கிரண் அப்பாவாரம் நாயகனாக நடித்து உள்ளார். நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் கடந்த 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
Also Read… இன்று மாலை வெளியாகிறது டோரதி படத்தின் முதல் சிங்கிள் கல்யாண விருந்து