பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மரணம்! சோகத்தில் திரையுலகம்
Sowcar Janaki Passes Away : பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தனது 94 வயதில் ஆகஸ்ட் 21, 2026 இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தனது 94 வயதில் ஆகஸ்ட் 21, 2026 இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் பிரச்னையால் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆகஸ்ட் 21, 2026 இன்று காலமானதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் உறுதிபடுத்தினார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மரணம்!
இந்த நிலையில் அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சென்டாப் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காகாகஆகஸ்ட் 21, 2026 இன்று மாலை 5 மணி முதல் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதையும் படிக்க : Nayanthara: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!




சௌகார் ஜானகி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். கடந்த 1955 ஆம் ஆண்டு தெலுக்கில் வெளியான சௌகார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் சௌகார் ஜானகி என அழைக்கப்பட்டு அதுவே அவரது பெயரானது. அவர் தமிழ், தெலுங்கில் பல முன்னணி இயக்குநர்களுடன் நடிகர்களுன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் இருகோடுகள், உயர்ந்த மனிதமன், பாமா விஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு சந்தானத்தின் பிஸ்கோத் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1969 ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இதையும் படிக்க : Nayanthara: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!
இது தொடர்பாக ஜூனியர் என்டிஆர் தனது பதிவில், இந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த சௌகார் ஜானகியின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஜானகியின் திரைப்பயணமும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.