மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… வைரலாகும் விஷ்ணு விஷாலின் அடுத்தப் படத்தின் அப்டேட்
Vishnu Vishal New Movie Update | தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே முன்னணி நாயகன்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதில் மட்டும் இன்றி தொடர்ந்து தயாரிப்பாளராக படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. மேலும் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்து நடிக்க உள்ள படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்தப் படம் சில பிரச்சனைகள் காரணமாக தொடங்காமலே நின்றது. அதனை அதிகாரப்பூர்வமாக விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் விஷ்ணு விஷாலின் அடுத்தப் படத்தின் அப்டேட்:
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக தமிழ் சினிமாவில் எந்த இயக்குநர் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி’FIR’ படத்தின் வெற்றிக் கூட்டணியான விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் மனு ஆனந்த் ஆகியோர் ஒரு புதிய படத்திற்காக மீண்டும் இணையவுள்ளனர். இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது; இதன் மூலம், விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட் கொண்ட படங்களில் ஒன்றாக இது அமையவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஓணம் ஸ்பெஷலாக வெளியான கலிஃபா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The successful FIR combo of #VishnuVishal and director #ManuAnand is set to reunite for a new project.
The film is reportedly being planned on a ₹50 Cr+ budget, making it one of the biggest budget films in Vishnu Vishal’s career.
Follow 👉 @FilmyBowlTamil pic.twitter.com/tAM0VM54kX
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 20, 2026
Also Read… தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்



