வாலிபால் பிளேயராக பவிஷ் நாராயண்… வைரலாகும் புதுப் படத்தின் வீடியோ
Actor Pavish Narayan New Movie Update | தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக உள்ளார் நடிகர் பவிஷ் நாராயண். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் அட்டாக்கர் படத்தின் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தனுஷின் அக்கா மகனாக அறிமுகம் ஆகி தற்போது வளர்ந்து வரும் நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் பவிஷ் நாராயண். சினிமா குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்த பவிஷ் நாராயண் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தினை பவிஷ் நாராயணின் தாய் மாமாவான நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே பவிஷிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்துப் படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஓ லவ்.
இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் காதலில் ஆண்களுக்கு வழங்கப்படும் ஞாயம் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் நியாம் தொடர்பாக பேசி இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைவிட ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.




வாலிபால் பிளேயராக நடிக்கும் நடிகர் பவிஷ் நாராயண்:
இந்த நிலையில் நடிகர் பவிஷ் நாராயண் அடுத்ததாக தனது மூன்றாவது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அட்டாக்கர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருவது வீடியோவைப் பார்க்கையில் தெரிகின்றது. மேலும் பவிஷ் இந்தப் படத்தில் வீரன் என்ற விளையாட்டு வீரராக நடித்து வருகிறார். நேற்று பவிஷ் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் படக்குழு இந்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இது நிஜமாவே பிரேமலு படத்தோட இந்தி ரீமேக்கா? வைரலாகும் பிரேம் கீதனு பட ட்ரெய்லர்
அட்டாக்கர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Born to fight. Built to attack. 🔥🏐
Wishing our powerhouse #Veeran @pavishvofficial a very Happy Birthday! ❤️🔥
From Team #Attacker#HBDPavish@zinemaindia @dineshrajoffl @netflixandsalad @DNaagapooshnam @saimunish3 @iamactorvarun @Ajith8volley @arjun_anbudan @GouthamMjt pic.twitter.com/QStg6YwnFv
— Zinema Media (@zinemaindia) August 18, 2026
Also Read… ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்… படக்குழு கொடுத்த அப்டேட்