AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லவ் ஓ லவ்… இந்த படத்தில் காதல் எங்க இருக்குனு நிஜமாவே தெரியல!

Love Oh Love Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான லவ் ஓ லவ் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

லவ் ஓ லவ்… இந்த படத்தில் காதல் எங்க இருக்குனு நிஜமாவே தெரியல!
லவ் ஓ லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 20:16 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் நாராயணன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை நாக துர்கா நாயகியாக நடித்து இருந்தார். இது நடிகை நாக துர்கா நாயகியாக அறிமுகம் ஆகும்முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதில் நடிகரும் இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் நாயகனின் தந்தையாகவும் நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவு, நடிகை வனிதா விஜயகுமார் மாதர் சங்க தலைவியாகவும் நடித்து உள்ளனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸைனிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் & கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் தினேஷ் ராஜ், ஜி. தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஃபாக்சன் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

படத்தோட டைட்டில் மட்டுதான் லவ் இருக்கு… படத்தில இல்ல:

லவ் ஓ லவ் படம் தொடங்கும் போதே மாதர் சங்க தலைவி வனிதா நாயகன் பவிஷ் மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். காதலித்த பெண்ணை பவிஷ் ஏமாற்றிவிட்டதாக. அந்த புகாரின் அடிப்படையில் பவிஷ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வர அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்வராகவன் உள்ளார். தனது காதலி துர்காவை விட்டு விலக வேண்டும் என பவிஷ் நினைக்க என்ன காரணம் என்று செல்வராகவனிடம் விளக்குறார்.

ஒரு துக்க வீட்டில் காதலியை பார்த்து காதலில் விழுந்த பவிஷ் அதற்கு முன்பு வரை குடும்பத்தில் மிகவும் பொருப்பான பையனாக இருக்கிறார். வாங்கும் 40 ஆயிரம் சம்பளத்தை தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் கொடுத்துவிட்டு எந்த கடனும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் காதலிக்க தொடங்கிய பிறகு முதலில் காதலின் ஆசையை நிறைவேற்ற ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குகிறார் இஎம்ஐயில்.

காதலிக்காக கடனாளி ஆகும் நாயகன்:

அதனைத் தொடர்ந்து வரிசையாக காதலியின் ஆசை என்று ஒவ்வொரு கடனாக பெற்று சுமார் 15 லட்சம் வரை கடனாலி ஆகி குடும்பத்தை கடன்காரர்கள் தெருவில் அசிங்கப்படுத்துக் அளவிற்கு மாறுகிறது. இதனால் மனமுடைந்த கே.எஸ்.ரவிக்குமார் மனைவி மற்றும் மகளை கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கிறார். தனியாக வசிக்கும் பவிஷ் காதலே வேண்டாம் என்று இருக்கிறார்.

தொடர்ந்து அவரைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று துர்கா துறத்த அதனை ஏற்க மறுக்கும் பவிஷ் என்று படம் செல்கிறது. இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை. பவிஷின் நடிப்பில் பல இடங்களில் அவர் தனது மாமா தனுஷின் 2000-களில் வெளியான படங்களின் நடிப்பை பார்க்க முடிந்தது.

Also Read… லைகா புரடெக்‌ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்‌ஷன் உள்ளது – ஜேசன் சஞ்சய்

ஆண்களுக்கு வந்தால் அது எப்போதுமே தக்காளி சட்ணிதான்:

லவ் ஓ லவ் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் காதல் என்பதே இல்லை. மாறாக எப்படி எல்லாம் காதல் இருக்க கூடாது என்பதற்கு பல விசங்கள் உள்ளது. இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக ஒரே ஒரு ஸ்டீரியோ டைப்பால் பாதிக்கப்படும் ஆண்களின் குடும்பத்தை போலவே இந்தப் படத்தில் பவிஷ் நாராயணின் குடும்பம் பாதிக்கப்படும்.

இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது. உங்களுக்கு வேறு என்ன செய்வதென்ன்று தெரியவில்லை. என்ன படமாக இருந்தாலும் 2 மணி நேரம் பார்க்கலாம் என்ற மனநிலையில் இருந்தால் இந்த லவ் ஓ லவ் படத்தை பாருங்கள்.

Also Read… ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us