Sardar 2: உண்மையான நேருக்கு நேர் மோதல்.. கார்த்தியின் சர்தார் 2 பட அதிரடி டீசர் வெளியானது!
Karthis Sardar 2 Teaser Out: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம்தான் சர்தார் 2. இது 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 பட தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கிய நிலையில், தற்போது இதன் அதிரடி டீஸரை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற ,மொழிகளில் தொடர்ந்து புது திரைப்படங்கள் உருவாகிவருகியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் வா வாத்தியார் (Vaa vaaththiyaar). இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் கார்த்தி நடித்துவந்த புது படம்தான் சர்தார் 2 (Sardar 2). இப்படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 (Sardar 1) படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா (Sj Suryah), மாளவிகா மோகனன் (Malavika Mohanan), ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், தற்போது இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை – ஜன நாயகன் பட எடிட்டர் எமோஷனல் பேச்சு!
கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் குறித்து வெளியாகி எக்ஸ் பதிவு:
The Hunt just got Bigger and Rules don’t apply anymore 🔥
🔗 – https://t.co/tr4VzAQ9ds#Sardar2Teaser arrives in style ⚡️@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69
— Prince Pictures (@Prince_Pictures) July 31, 2026
சர்தார் 2 டீசர் எப்படி இருக்கு:
சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியாக இந்த டீசரில் தெரிகிறது. இதில் கார்த்தி அதிரடி வேடத்தலிலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில எமோஷனல் காட்சிகளும் உள்ளது. இப்படமானது கிட்டத்தட்ட ஹாலிவுட் பட ரேஞ்சில் விஷுவல்ஸ் எல்லாமே இருக்கிறது என கூறலாம். நிச்சயம் கார்த்திக்கு 2026ம் ஆண்டில் வெற்றிப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் எப்போது:
கார்த்தியின் இந்த சர்தார் 2 படமானது, 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகியுள்ளது. சர்தார் 1 படத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சர்தார் 2 படத்தில் மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பெற்றோர் கொடுத்த ஊக்கம்.. சினிமாவில் நடிப்பதற்கான காரணத்தை சொன்ன பிரீத்தி முகுந்தன்!
சர்தார் 1ன் தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், பாகம் 2 படமும் அதை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படம் உருவாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல்; உருவான நிலையில், வரும் 2026ம் செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.