AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்தி உடன் கூட்டு சேரும் நடிகர் கவின் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Actor Karthi Next Movie Director Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் பிசியாக உருவாகி வரும் நிலையில் அவரது 31-வது படத்தை யார் இயக்க உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கார்த்தி உடன் கூட்டு சேரும் நடிகர் கவின் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
கார்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jun 2026 16:02 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் வந்து தற்போது நாயகனாக வலம் வருபவர்தான் நடிகர் கார்த்தி. இவர் வெளிநாட்டில் தனது படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகு இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவரை இயக்குநர் அமீர் பார்த்து தனது பருத்துவீரன் படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்க வாய்ப்பை தவறவிடாமல் நடித்தார் நடிகர் கார்த்தி. அப்படி பருத்திவீரன் படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்தி அடுத்தடுத்து தொடர்ந்து பலப் படங்களில் நடித்து சூப்பர் ஹிட்டையும் கொடுத்தார். தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதன் காரணமாக தமிழ் சினிமாவில் அவர் முன்னணி நாயகன்களில் ஒருவராக மாறினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் தனது 30-வது படத்திற்காக தற்போது தெலுங்கு சினிமா இயக்குநருடன் நடிகர் கார்த்தி இணைந்து இருந்த தகவல் வெளியாகி வைரலான நிலையில் அவரது 31-வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

கார்த்தி படத்தை இயக்கும் டாடா பட இயக்குநர்:

கார்த்தியின் அடுத்த படத்தை கணேஷ் பாபு இயக்கவுள்ளார். இவர் முன்னதாக நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் கார்த்தி 31 ஆக அமையக்கூடும். இத்திட்டம் தற்போது இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி தற்போது கல்யாண் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Engal Thangam: 2 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி.. சமந்தாவின் எங்கள் தங்கம் படம் வெற்றியானதா? இல்லையா?- விமர்சனங்கள் இதோ!

Follow Us