புயலைக் காணத் தயாராகுங்கள்… இன்று மாலை வெளியாகிறது தனுஷ் 55 படத்தின் டைட்டில்!
Dhanush 55 Movie Title Will Be Release Today Evening | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது அவரது 55-வது படம். இந்தப் படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தமிழ் மொழியில் நாயகனாக அறிமுகம் ஆன இவர் ஹாலிவுட் வரை படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை 54 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து தனது 55-வது படத்தினை விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார் நடிகர் தனுஷ்.
அதன்படி நடிகர் தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரிய சாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் மோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா இருவரும் நடித்து வருகின்றனர். தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




இன்று மாலை வெளியாகிறது தனுஷ் 55 பட டைட்டில்:
அதன்படி படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 55-வது படத்தின் டைட்டில் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது. அதன்படி இன்று 18-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு மாலை 6.30 மணிக்கு தனுஷின் 55-வது படத்தின் டைட்டிலை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கர படத்தின் எக்ஸ்குளூசிவ் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#D55 First Strike drops at 6:30 PM ⚡️
Get ready to witness the STORM ⏳🔥@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @kavya_sriram… pic.twitter.com/s2IRGqSkw4
— Wunderbar Films (@wunderbarfilms) June 18, 2026
Also Read… ரீ ஷூட்டிங்கில் ஜெயிலர் 2 படக்குழு – எப்போது படம் வெளியாகும்?