AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் சேதுபதி – கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

Vijay Sethupathi starring and Kiruthiga Udhayanidhi directorial movie update | தமிழ் சினிமாவில் பலப் படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் கிருத்திகா உதயநிதி. இவர் அடுத்தாக விஜய் சேதுபதி படத்தை இயக்க உள்ள நிலையில் அந்தப் படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி – கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
விஜய் சேதுபதி - கிருத்திகா உதயநிதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2026 16:09 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறா கிருத்திகா உதயநிதி. தமிழ் நாட்டின் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் மருமகளாக உள்ள இவர் சினிமாவில் இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் மற்றும் இணையதள தொடர் பெரும்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார் கிருத்திகா உதயநிதி. அதன்படி வணக்கம் சென்னை என்ற படத்தை தமிழ் சினிமாவில் இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து காளி என்ற படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இணையதள தொடராக கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் என்ற தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஃபீல் குட் பாணியில் வெளியானது இது மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து பிசியான இயக்குநராக உள்ள கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் காதலிக்க நேரமில்லை என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி – கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்?

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி அடுத்ததாக இயக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது. அதன்படி விஜய் சேதுபதி நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பிலும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவிலும் உருவாகும் இப்படம், விஜய் சேதுபதியின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோலிவுட்டின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சாவின் ஊதியம் ரூபாய் 2 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. D55 பட முக்கிய அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்… தனது குழந்தைகளுடன் முத்த மழையில் அஜித் குமார் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us