நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்… தனது குழந்தைகளுடன் முத்த மழையில் அஜித் குமார் – வைரலாகும் போட்டோஸ்
Ajith Kumar with his Childrens | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சமீபத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது ரசிகர்கள் அஜித் குமார் எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் சினிமாவில் சாதித்து உள்ளார் என்று கூறி அவரை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் அவரது கார் ரேஸிங்கிலும் பிசியாக வலம் வருகிறார். இவர் நடிப்பு மற்றும் கார் ரேஸிங்கில் தொடர்ந்து ஒரே அளவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான ப்ரீ புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் அஜித் குமார் 64 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து தற்போது அஜித் குமார் தனது 64-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வபோது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தனது குழந்தைகளுடன் முத்த மழையில் அஜித்:
தொடர்ந்து நடிப்பில் ரேஸிங் என இரண்டிலும் பிசியாக உள்ள அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன் நேரம் செலவிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி அஜித் குமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… மகாநதி சீரியலில் லாஸ்ட் டே ஷூட்டிங்.. எமோஷனலாக கண்ணீர்விட்ட நடிகர்கள் – வீடியோ இதோ!
ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… Anirudh: அனிருத்துக்கு பிடிச்ச நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!