AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ்.. 13வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!

Ajith Kumar Shines in Asian Le Mans: கோலிவுட் சினிமாவில் நடிகராக இருந்து, தற்போது முழுவதுமாக கார் ரேஸ் பக்கம் திரும்பியவர் அஜித் குமார். இவர் தனது அணியினருடன் பிரான்சில் நடைபெற்றிருந்த ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருந்தார். இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 13வது இடத்தை பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar: ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ்.. 13வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
அஜித் குமார் ஆசிய லெ மான்ஸ் சாதனைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2026 20:25 PM IST

நடிகராகவும், கார் ரேஸராகவும் ஒட்டுமொத்த தமிழ் மற்றும் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தனது கார் ரேஸ் (Car Racing) பயிற்சியில் இருந்துவருகிறார். இந்த பயிற்சியின்போது கிட்டத்தட்ட 6-க்கும் மேற்பட்ட சந்வதேச போட்டிகளில் இவர் கலந்துகொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மிகவும் பிரபலமான நிலையில், தற்போது கார் ரேஸராக இந்திய முழுவதும் பிரபலமானவராக இருக்கிறார். இவர் சமீபகாலமாக ஏசியன் லெ மான்ஸ் போட்டிக்காக (Asian Le Mans Car Race) தனது அணியுடன் பயிற்சியில் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு மே 30ம் தேதியில் அஜித்தின் தாய் மோகினி காலமானார். இதையடுத்து உடனே விரைந்து இந்திய வந்த அஜித், தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மீண்டும் தனது கார் ரேஸ் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஏசியன் லெ மான்ஸ் போட்டியில் தனது அணியுடன் கலந்துகொண்ட நிலையில், அஜித் குமாரின் அணியானது 13வது இடத்தை பிடித்துள்ளது சாதனை படைத்துள்ளது. மேலும் வரும் பந்தயங்களில் இன்னும் சிறப்பான இடத்தை பெறுவோம் என அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்த அறிவிப்பு பதிவை அஜித்தின் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி படத்தை புகந்து பேசிய மாரி செல்வராஜ்

ஏசியன் லெ மான்ஸ் போட்டியில் அஜித்தின் அணி 13வது இடத்தை பிடித்தது குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

தனது கார் ரேஸிங் திட்டங்கள் குறித்து அஜித் கூறிய விஷயம் :

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசிய அஜித், அதில் “நான் கிட்டத்தட்ட 3 அன்டுகளுக்கும் மேலாக துபாயில் வசித்துவருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியவில் உள்ளனர். கார் ரேஸ் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கவேண்டிய கடமைகள் இருப்பதால தற்போது கார் ரேஸ் பயிற்சியில் அதிகம் நேரத்தை செலவிட்டு வருகிறேன். ஏசியன் லெ மான்ஸ் மற்றும் இ.எல்.எம்.எஸ் ஆகிய தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம். என்னால் முடிந்தவரை எவ்வளவு காலம் கார் ரேஸ் போட்டியில் ஈடுபட முடியோமோ, அவ்வளவு காலம் ஒவ்வொரு வருட க்ரெவேண்டிக் சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பேன்” என அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: எல்லாம் இனிதே.. சேயோன் பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

தற்போது ஏசியன் லெ மான்ஸ் தொடரில் அஜித்தின் அணி கலந்துகொண்ட நிலையில், மேலும் அடுத்த தொடருக்கான பயிற்சியில் அஜித் ஈடுபடவுள்ளாராம். மேலும் இதற்கிடையே இவர் படங்களில் நடிப்பாரா? இல்லையா? என இன்னும் உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்திற்கான தயாரிப்பு நிறுவனத்தின் சிக்கலே நீட்டித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us