மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி படத்தை புகந்து பேசிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj praised Habeebi movie | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஹபீபி படத்தை பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநாக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் வெளியான அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அதன்படி பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்படி இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காலமாடன் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது மஞ்சனத்தி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஹபீபி படம் குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஹபீபி படத்தை புகந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்:
அதன்படி மாரி செல்வராஜ் அவரது பதிவில் கூறியதாவது, அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு என்று தெரிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக… pic.twitter.com/XLXtB8ua6N
— Mari Selvaraj (@mari_selvaraj) June 12, 2026
Also Read… நாங்க நாலு பேரு பாடல் வீடியோவை ரிலீஸ் செய்த கருப்பு படக்குழு