AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழையும் பரிமளா & கோ படம் – மகிழ்ச்சியில் படக்குழு

Parimala and Co movie successfully enters its second week | தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கட்னத வாரம் திரையரங்குகளில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் நுழைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.

இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழையும் பரிமளா & கோ படம் – மகிழ்ச்சியில் படக்குழு
பரிமளா அண்ட் கோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 16:17 PM IST

தமிழ் சினிமாவில்  தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக இவரது இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் கடந்த 05-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் ஜோடியாக உள்ள ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் இணைந்து முன்னணி வேடத்தில் நடித்து உள்ளனர். இவர்களின் மகள்களாக நடிகைகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிஸ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபனா, சிங்கம்புலி, செண்ட்ராயன், பகவதி பெருமாள், பூர்ணிமா ரவி மற்றும் தமிழ் குமரன் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர்.

இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழையும் பரிமளா & கோ படம்:

இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது இரண்டாம் வாரத்தில் வெற்றீகரமாக நுழைந்துள்ளது. மேலும் டார்க் காமெடி த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் மணிகண்டனின் புதுப் படத்தின் அப்டேட்

பரிமளா & கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Krithi Shetty: நடிகைகளில் பணிநேர பிரச்சனை: தனது கருத்தை முன்வைத்த கிரித்தி ஷெட்டி!

Follow Us