40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலிவுட் நாயகன் – அட இவரா?
Jailer 2 Movie cameo: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்தாலும், பல்வேறு மொழிகளில் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரின் ஜெயிலர் 2 படத்தின் காட்சிகளுக்கான ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் உச்ச நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் தெடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டின் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இப்படமானது 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1ன் படத்தின் தொடர்ச்யான் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இதில் ஜெயிலர் 1ல் (Jailer 1) நடித்த பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். மேலும் புதிய நடிகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காட்சிகளுக்கான ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுவருகிறதாம். இந்நிலையில் தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், பாலிவுட் நடிகர் ஒருவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். அவர் வேறுயாருமில்லை பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன்தான் (Hrithik Roshan).




இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உலகமெங்கும்.. வசூலில் சாதனை படைத்த பெத்தி.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?
40 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்:
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் இறுதியாக இந்தியில் வார் 2 என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி ஏற்கனவே கடந்த 1986ம் ஆண்டில் வெளியான பவான் டாடா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்தின் தத்தெடுக்கப்பட்ட மகனாக ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருந்தார். இந்நிலையில் இது குறித்த ஹ்ரித்திக் ரோஷனும் பலமுறை பேசியுள்ளர். அந்த வகையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் ஹ்ரித்திக் ரோஷன் இணைவது குறித்து வைரலாகும் பதிவு:
HRITHIK ROSHAN’s cameo in the MEGA FILM #Jailer is now 100% confirmed 🔥✅
Imagine #HrithikRoshan OVERSHADOWING #Rajinikanth in terms of SCREEN PRESENCE whenever they share the same frame in the Film 💥🤯
MASS MAYHEM everywhere, because nobody can match Hrithik when it comes to… pic.twitter.com/YPwsoEUutc
— CineHub (@Its_CineHub) June 11, 2026
தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி மற்றும் 23ம் தேதியில் ஷூட்டிங்கில் ஹ்ரித்திக் ரோஷன் இணைகிறாராம். இப்படத்தில் இவர் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.