AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விவகாரம் – 12-ம் தேதி விளக்கம் கொடுக்கும் நடிகர் லாரன்ஸ்

Actor Lawrence | தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் லாரன்ஸ். இவரது படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்த நிலையில் சமீப காலமாக அரசியல் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விவகாரம் – 12-ம் தேதி விளக்கம் கொடுக்கும் நடிகர் லாரன்ஸ்
நடிகர் லாரன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 14:59 PM IST

தென்னிந்திய சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் பிறகு அரசியலில் களம் இறங்குவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அதில் தமிழ் சினிமாவில் இருந்து தமிழக அரசியலில் போட்டியிட்டு முதலமைச்சராக பணியாற்றிவர்களும் அதிகம். அப்படி அந்த வரிசையில் தற்போது நடிகர் தளபதி விஜயும் இணைந்துள்ளார். அதன்படி அவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போது திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது மட்டும் இன்றி தமிழகத்தில் அதிக இடங்களில் அவரது கட்சி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைசராகவும் உள்ளார். ஒரே நேரத்தி இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப் பெற்ற விஜய் ஏதேனே ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ராஜினிமா செய்வதாக முடிவு செய்தார்.

இதன் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக சின தகவல்கள் இணையத்தி பரவியது. இது குறித்து லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து லாரன்ஸ் சொன்ன விசயம்:

அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூரியதாவது, அனைவருக்கும் வணக்கம். 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற ஆழ்ந்த தனிப்பட்ட துயரத்தை அளிக்கிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். இனி, 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் நிச்சயமாக 300 கோடி வசூலை தாண்டும் – வைரலாகும் தயாரிப்பாளர் பேச்சு

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரவி மோகன் மீது மீண்டும் குற்றச்சாட்டை வைத்த ஆர்த்தி – என்ன நடந்தது

Follow Us