தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!
Tamil Nadu Finance Minister Maria Wilson : தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழகத்தில் நிகழ்ந்த ஊழல்கள் தொடர்பான பட்டியல் சமர்ப்பிக்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் முதல்வரின் கரம் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: தமிழகத்தில் 2026 இல் எப்படி ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டதோ, அதேபோல, 2029 இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மாபெரும் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தின் மூலமாக நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருந்தார். இதை கேட்டதும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் பார்ட்டி ஃபண்ட் என்றால் என்னவென்றே தெரியாதவாறு அவையில் இருந்து வெளியேறி சென்றனர்.
தமிழக பட்ஜெட் தொடரில் ஊழல் பட்டியல் தாக்கல்
தற்போது, நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் போது ஊழல் பட்டியல் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் தற்போது நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால், சில அரசியல்வாதிகள் தற்போதும் நடித்து கொண்டு இருக்கின்றனர். சட்டப்பேரவையில் பலர் வரைமுறை இன்றி பேசுகின்றனர். ஆனால், நாங்கள் அவ்வாறு பேசியது கிடையாது. அவர்கள் அப்படி பேசினாலும், நாங்கள் பேசப் போவது கிடையாது.
மேலும் படிக்க: எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!




ஊழல் பட்டியல் மூலம் பதிலடி கொடுப்போம்
இதை புரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு அவதூறாக பேசினால், எங்களது பேச்சு ஊழல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் பதிலடி கொடுக்கப்படும். வரும் காலங்களில் ஊழல் இல்லாத தமிழகத்தில் மக்கள் வாழ போகின்றனர். இதனை கெடுப்பதற்காக தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் 3 மாதங்களில் கவிழ போகிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். தமிழகத்தில் அரசு துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
ஊழலுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை
அந்த வகையில், கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்து இருந்தது. அத்துடன், ஊழல் தொடர்பான பட்டியலை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. இதில், ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!