AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!

Anbumani Latest Pressmeet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது என்றும், அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் பாமக செயல்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், மகனுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதை பார்க்கலாம்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!
அன்புமணி- ராமதாஸ்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Jul 2026 18:41 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது என்று கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து துறவறம் பெறுவது அவரது சொந்த முடிவாகும். இருந்தாலும், எங்களை பொறுத்தவரை அரசியலில் யாருக்கும் ஓய்வு என்பது கிடையாது. அதன் அடிப்படையில், ராமதாஸின் வழிகாட்டுதலின்படி பாமக செயல்படும். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகி இருப்பது வரவேற்புகுரியதாகும். இந்த முடிவை கடந்த சில நாட்களுக்கு முன்பே அவர் அறிவித்திருக்க வேண்டும். நீட் தேர்வு குளறுபடி என்பது ஒரு சிறிய பிரச்சனை மட்டுமே. மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியதால் மட்டும் இதற்கு தீர்வு ஏற்பட்டு விடாது. எனவே, மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடாகும்.

தமிழ்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடமா

தமிழக ஆளுநர் பங்கேற்கும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவது பாடப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். இது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் செயல் ஆகும். அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும். தமிழகத்தின் மரபு சார்ந்த ரயில்களில் தமிழக பொறுப்பாளர் ஆர். வி. ராஜேந்திர பிரசாத் அர்லேகர் அரசியல் செய்யக்கூடாது.

மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!

மேகதாது விவகாரம் தமிழக மக்களின் பிரச்னை

மேகதாது அணையை கட்டுவதாக கூறிவரும் கர்நாடக முதல்வர் டி. கே. சிவக்குமாருடன், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த தீர்வும் ஏற்பட்டு விடாது. தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3- ஆம் தேதி கர்நாடகம் சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. மேகதாது அணை விவகாரம் என்பது ஒரு கட்சியின் பிரச்சனை கிடையாது. அது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினை ஆகும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் அவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுத்து பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து, அதன் பின்னர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் பாமக இடம்பெறாது. பாமக நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எனவே, தவெக அமைச்சரவையில் பாமக இடம் பெற உள்ளதாக கூறப்படுவது வதந்தி என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!

Follow Us