அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய் – அதிகாரப்பூர்வ தகவல்
Vijay to Flag Off Ajith’s Race: பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, அன்றைய போட்டிய தொடங்கி வைக்கவுள்ளதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10, 2026 இரவு லண்டன் செல்லும் முதல்வர் விஜய் இந்த வார இறுதியில் லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, அன்றைய போட்டியை பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாக லே மான்ஸ் கோப்பை (Le Mans Cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வருகிற செப்டம்பர் 10, 2026 இன்று லண்டன் செல்லவுள்ளார். அங்கு அவர் செப்டம்பர் 16, 2026 வரை தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்தித்து சேவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் ரேசையும் அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.



இதையும் படிக்க : மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the… pic.twitter.com/pZiZOKy7yW
— Le Mans Cup (@LeMansCup) September 10, 2026
மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?
குறிப்பாக, இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்கிறார். அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 2026 Michelin Le Mans Cup தொடரில் LMP3 Pro/Am பிரிவில் போட்டியிட்டு வருக்கிறது.இதனால், ஒரே இடத்தில் திரையுலகில் முன்னணி போட்டியாளர்களாக திகழ்ந்த நடிகர் அஜித்தும் முதல்வர் விஜய்யும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில்வர்ஸ்டோன் ரவுண்டில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்க உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12, 2026 அன்று சனிக்கிழமை முக்கிய பந்தயம் நடைபெற உள்ளது.