AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!

Kanchipuram Pregnant Women And Infant Death : காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Sep 2026 20:29 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சிங்காரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் ( 40 வயது). இவரது மனைவி தேன்மொழி ( 35 வயது). இவர்கள் காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரின் மரக்கிடங்கில் தங்கி இருந்து மரம் வெட்டும் கூலி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆறுமுகம் அனுமதிக்காத நிலையில், தேன் மொழியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், ஆனந்தன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஆனந்தன் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை அளிப்பதற்காக சப் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை மற்றும் சப் கலெக்டர் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!

கர்ப்பிணி- சிசு உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி

முன்னதாக, ஆனந்தன் மற்றும் தேன்மொழி ஆகியோர் ஆறுமுகம் நடத்தி வந்த மரக்கிடங்கில் தார்ப்பாய் கொட்டகை அமைத்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில், ஆறுமுகத்திடம், ஆனந்தன் குடும்ப செலவுக்காக ரூ. 20 ஆயிரம் முன்பணம் வாங்கியுள்ளார். அதனை, திரும்ப கேட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு ஆறுமுகம் மிரட்டியுள்ளார். பணம் இல்லாத காரணத்தால் ஆனந்தன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தார்ப்பாய் கொட்டகையில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

குழந்தை பாதி வெளியேறிய நிலையில் உயிரிழப்பு

அப்போது, தேன்மொழி மட்டும் தனியாக இருந்த நிலையில் அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை வெளியேறத் தொடங்கியது. இதில், அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், குழந்தையின் பாதி உடல் வெளியேறிய நிலையில், திடீரென தேன்மொழி மரணம் அடைந்தார். அத்துடன், அந்த சிசுவும் உயிரிழந்தது. இதனை மறைப்பதற்காக ஆனந்தனிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து இயற்கை மரணம் என கூறி, தேன்மொழியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு ஆறுமுகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Follow Us