AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசிய கோப்பை 2026 : வங்கதேச மகளிரணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Indw vs BanW : ஆசிய கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் வங்கதேச மகளிரணிக்கு 150 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

ஆசிய கோப்பை 2026 : வங்கதேச மகளிரணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
ஷஃபாலி வர்மா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Sep 2026 22:07 PM IST

ஆசிய கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் வங்கதேச மகளிரணிக்கு 150 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியி , இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்த வங்கதேச அணிக்கு எதிராக, ஷஃபாலி வர்மா 64 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தார்.

வங்கதேச மகளிரணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, அணியின் மொத்த ஸ்கோரை 150 ரன்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றார்.  தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். 160 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், 13.5 ஓவர்களில் சுல்தானா கதுனின் பந்துவீச்சில் மாற்று பீல்டரான ஃபரியானா எஸ்மினிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 92/3 ஆக இருந்தது.

இதையும் படிக்க : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் – ஹர்ஷித் ரானாவுக்கு புதில் யாஷ் தாக்கூர் தேர்வு

ஷஃபாலியுடன் இணைந்து ஆடிய பிரதிகா ராவல் 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை 59க்கு உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அதேவேளையில் தீப்தி சர்மா 6 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு பக்கம் பாரதி ஃபுல்மாலி ஒரு பந்தை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி ரன்-அவுட் ஆனார். வங்கதேச பந்துவீச்சாளர்களில், சுல்தானா 3 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மருஃபா அக்தர் 4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், நஹிதா அக்தர் 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், ரபேயா கான் 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 20வது அரைசதத்தை ஷஃபாலி வெர்மா பதிவு செய்தார். 40 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்கள் குவித்த அவர், தனது ஆட்டம் முடிவடையும் நேரத்தில் இந்திய அணிக்கு ஒரு வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்.

இதையும் படிக்க : 350 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்.. துலீப் கோப்பை அப்டேட்ஸ்

இந்த அரைசதத்துடன், மகளிர் ஆசியக் கோப்பையில் ஷஃபாலி வர்மாவின் அரைசதங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது,  இதன் மூலம் அவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சக இந்தியத் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனாவும் 4 அரைசதங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

Follow Us