IND A vs AUS A: காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா.. உள்ளூர் போட்டிகளில் பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு..! உடற்தகுதி பெறுவாரா?
Hardik Pandya Comeback: பல நாட்கள் நடைபெறும் தொடருக்கு ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாவது போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 9ம் தேதியும், மூன்றாவது போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதியும் நடைபெறும்.
நீண்ட காலமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த ஹர்திக் பாண்ட்யா, பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய அணிக்குத் திரும்புவதற்கு முன்பு, ஹர்திக் பாண்ட்யா இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடவுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு (IND A vs AUS A) எதிரான ஒருநாள் தொடருக்கும் ஹர்திக் பாண்ட்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் பலநாள் தொடர்களுக்கான அணிகளை பிசிசிஐ (BCCI) இன்று அதாவது 2026 செப்டம்பர் 9ம் தேதி அறிவித்தது.
இது தொடர்பான பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியை ஆடவர் தேர்வு குழு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் இந்தத் தொடரில் 2 பல நாள் போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் அடங்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் 2 பல நாள் போட்டிகளுடன் தொடங்கும். முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 22 முதல் 25ம் தேதிக்குள் நடைபெற உள்ளது.
ALSO READ: ஒரு போட்டிக்கு ரூ.1.31 கோடி.. அசோசியேட் ஸ்பான்சரை கைப்பற்றிய பிசிசிஐ!




ஹர்திக் பாண்ட்யா எப்போது திரும்புவார்?
பல நாட்கள் நடைபெறும் தொடருக்கு ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாவது போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 9ம் தேதியும், மூன்றாவது போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதியும் நடைபெறும். இருப்பினும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவாரா என்பது, அவரது உடற்தகுதி அறிக்கையைப் பொறுத்தே அமையும் என்று பிசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் யார்..?
பல நாட்கள் நடைபெறும் தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில், தேவ்தத் படிக்கல் கேப்டனாக தலைமை தாங்குகிறார். அதேநேரத்தில், சாய் சுதர்ஷன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். என். ஜெகதீசன் மற்றும் குமார் குஷாக்ரா இருவரும் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர். வைசாக் விஜய் குமார் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது உடற்தகுதி அறிக்கையைப் பொறுத்தே அவரது பங்கேற்பு அமையும்.
ருதுராஜ் கெய்க்வாட் ஒருநாள் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குவார். படிக்கல் துணைத் தலைவராக இருப்பார். ஹர்திக் பாண்டியா உடற்தகுதி அனுமதி பெற்ற பின்னரே விளையாடத் தகுதியுடையவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான பல நாள் தொடருக்கான இந்தியா A அணி
அமன் மொகடே, ஆயுஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), யாஷ் ரத்தோர், ஷேக் ரஷீத், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் கம்போஜ், பிரஃபுல்லா ஹிங்கே, விஜய், வக்கீஷ் பூகதே குமார்.*
ALSO READ: துலீப் கோப்பை பைனல் டிரா-வா..? கோப்பை யாருக்கு?
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி
பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்ஷன், தேவ்தத் பாடிக்கல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரஜத் படிதார், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகாம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் தீர், ஹர்திக் சிங் பாண்டியா*, சிங், யாஷ் தாக்கூர்