Jesús de Miguel Death: எதிர்பாராமல் மோதிய கோல் கீப்பர்.. கால்பந்து வீரர் மரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
Football Player Injury Death: ஸ்பெயின் கால்பந்து வீரர் ஜீசஸ் டி மிகுவல், 2026 நவம்பர் 3 அன்று டெனரிஃப் அணிக்காக விளையாடும் போது மைதானத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தார். அன்டோரா கோல்கீப்பருடன் மோதியதில் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் மாரடைப்பால் ஏற்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன. டெனரிஃப் கிளப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
கால்பந்து (Football) விளையாட்டு உலகிலிருந்து மிகவும் சோகமான மற்றும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இன்று அதாவது 2026 நவம்பர் 3ம் தேதி ஸ்பெயின் நாட்டின் டெனரிஃப் கிளப் (Tenerife FC) வீரரான ஜீசஸ் டி மிகுவல் எதிர்பாராத விதமாக கோல்கீப்பருடன் நேருக்கு நேர் ஓடி வந்து மோதி கொண்டதில் உயிரிழந்தார். எஃப்சி அன்டோரா மற்றும் டெனரிஃப் அணிகளுக்கு இடையேயான ஸ்பெயின் இரண்டாம் டிவிஷன் போட்டியின் போது இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. இதன் விளைவாக 30 வயதான ஜீசஸ் டி மிகுவல் பலத்த காயங்கள் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ALSO READ: தங்கம் வென்ற பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை.. ஊக்கமருந்து தடை காரணமா?




மோதிக்கொண்ட அதிர்ச்சி வீடியோ:
HEARTBREAKING NEWS FROM SPAIN! 🇪🇸💔
30-year-old Tenerife striker Jesús de Miguel has passed away in hospital after suffering a collision with Andorra Goalkeeper Jesús Owono during a match.
Heartfelt condolences to his family, friends and teammates.
Rest in peace! 🙏 https://t.co/lSDTp61G5t
— The Khel India (@TheKhelIndia) November 3, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளப் வெளியிட்ட அறிக்கையில், “மிகுந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும், இது உண்மை என்பதை நம்ப முடியாமலும், சிடி டெனெரிஃபே சார்பாக நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், இன்று அதாவது நவம்பர் 3, 2026 அன்று, காலை 8:00 மணிக்கு, ஜீசஸ் டி மிகுவல் அல்மெய்டா துரதிர்ஷ்டவசமாகக் காலமானார்.
ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இல்லை. இந்த ஆழ்ந்த துயர உணர்வைத் தணிக்க எதனாலும் முடியாது. துயரத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருடனும், அன்புக்குரியவர்களுடனும், இன்று இந்தக் கொடூரமான முடிவிற்காகத் துக்கம் அனுசரிக்கும் டினெர்ஃபெனிஸ்மோவைச் சேர்ந்த அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.
ஜீசஸ் டி மிகுவலின் குடும்பத்தினர், நீங்கள் அளித்த அனைத்து ஆதரவிற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இந்த மிகவும் கடினமான நேரத்தில் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.” என்று தெரிவித்திருந்தது.
ALSO READ: டெல்லி அணியில் 15 வயது வீராங்கனை.. WPL வரலாற்றில் உமா காஷ்வி புது சாதனை!
கைவிடப்பட்ட போட்டி:
ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் நடந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. போட்டி முடியும் தருவாயில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு போட்டி கைவிடப்பட்டது.
மரணத்திற்கு காரணம் என்ன..?
ஸ்பானிய ஊடகங்களின்படி, டி மிகுவலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மருத்துவமனையில், மிகுவல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பின்னர், டி மிகுவலின் நரம்பியல் நிலை மோசமடைந்துவிட்டதாகவும் அதன்பின்னர் அவர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தது.