AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: கட்டுக்கடங்காத ரசிகர்கள்.. அனைவருக்கும் ஆட்டோகிராஃப் போட்ட கோலி!

Virat Kohli Autograph: இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆக்லாந்தில் பயிற்சியின் பின்னர் சோர்வாக இருந்தபோதிலும், ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு கையெழுத்து போட்டார். ற்சியின் பின்னர் சோர்வாக இருந்தபோதிலும், ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு கையெழுத்து போட்டார். முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4 அன்று ஈடன் பார்க்கில் நடைபெறுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லிவ்-வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

IND vs NZ: கட்டுக்கடங்காத ரசிகர்கள்.. அனைவருக்கும் ஆட்டோகிராஃப் போட்ட கோலி!
விராட் கோலிImage Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Nov 2026 19:50 PM IST

டி20 தொடருக்கு பிறகு நியூசிலாந்து – இந்தியா (IND vs NZ) இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில், விராட் கோலி (Virat Kohli) தற்போது உலகில் மிகவும் போற்றப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். கோலி எங்கு கிரிக்கெட் விளையாடினாலும், அவரைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். போட்டிகளின் போது மட்டுமல்ல, பயிற்சி அமர்வுகளின் போதும் கூட, அவரைப் பார்க்க பெருந்திரளான மக்கள் கூடுகின்றனர். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா என எல்லா இடங்களிலும் இது தெளிவாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கிலும், நேற்று அதாவது 2026 நவம்பர் 2ம் தேதி இதே காட்சி காணப்பட்டது.

ALSO READ: நியூசிலாந்தில் விராட் கோலியின் ராசி எப்படி..? ஆதிக்கமா..? எதிரணிக்கு பாதிக்குமா?

ரசிகர்களுக்காக கோலி செய்த செயல்:

2026 நவம்பர் 2ம் தேதியான நேற்று தன்னைக் காண்பதற்காக ஈடன் பார்க் மைதானத்தில் கூடியிருந்த அனைத்து ரசிகர்களுக்கும் விராட் கோலி ஒரு மறக்க முடியாத நினைவு பரிசை அளித்தார். கோலி நெருங்கி வந்தபோது, ​​ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கோலி விரைவில் கிளம்பிவிடுவார் என்று நினைத்த அவர்கள், அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டனர். இருப்பினும், கோலி சிறிது நேரம் அங்கேயே நின்று, அனைவரிடமும் கையெழுத்து வாங்க முயன்றார்.

சோர்வுடன் கையெழுத்து போட்ட விராட் கோலி:


நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக விராட் கோலி தீவிர பயிற்சியிலிருந்து திரும்பி வந்திருந்ததால் சோர்வாக இருந்தார், ஆனாலும் கோலி பெருந்தன்மையுடன் மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்களுடன் அதிக நேரம் செலவிட்டு கையெழுத்திட்டார். அதிர்ஷ்டவசமாக, கோலிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் ஒரு நெட் இருந்ததால், கோலிக்கு பெரிய சிரமம் எதுவும் ஏற்படவில்லை. அந்த வலைக்கு அடியிலிருந்து சில பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குட்டி பேட்டில் கையெழுத்து கேட்பதை கோலி கவனித்தார். அவர் குனிந்து, அந்த பேட்டை வாங்கி, அந்த ரசிகையின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள்.. விறுவிறுப்பான போட்டியின் நேரலையை எங்கே பார்ப்பது?

முதல் ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கும், இது இந்திய நேரப்படி காலை 7:30 மணியாகும். டாஸ் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு நடைபெறும்.

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும். சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பு கிடைக்கும்.

Follow Us