AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலை 6 முதல் 7… இரவு 7 முதல் 8 – தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Firecracker Timings : தீபாவளிப் பண்டிகை நாளான நவம்பர் 8, 2026 அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த 2026 ஆம் ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காலை 6 முதல் 7… இரவு 7 முதல் 8  –  தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Nov 2026 19:48 PM IST

சென்னை, நவம்பர் 3 : தீபாவளிப் பண்டிகை நாளான நவம்பர் 8, 2026 அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு (TN Government)அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசுகளால் எழும் அதிகப்படியான ஒலியும் காற்று மாசும், சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோரை உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கின்றன. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018 அக்டோபர் 23 அன்று பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களைக் கொண்டு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இதையும் படிக்க : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு – பெருந்துறையில் முதல்வர் விஜய்

குறிப்பிட்ட திறந்தவெளிப் பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இந்த நேரக் கட்டுப்பாட்டை விதித்து வருகிறது.

அதன் படி குறைந்த ஒலியும், குறைந்த காற்று மாசும் ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிக் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம், திறந்தவெளியில் ஒன்றுகூடிக் கூட்டாகப் பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

  • அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதிப் பகுதிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.
  • குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல்நலப் பாதிப்புகள் குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படை, பசுமை மன்றங்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

இதற்கிடையே தீபாவளி நாளான நவம்பர் 8 , 2026 அன்று தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us