மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு – பெருந்துறையில் முதல்வர் விஜய்
Tamil Nadu Welfare Schemes : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நவம்பர் 3, 2026 இன்று நடைபெற்ற அரசு விழாவில், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு, ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
ஈரோடு, நவம்பர் 3 : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நவம்பர் 3, 2026 இன்று நடைபெற்ற அரசு விழாவில், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு, ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன உதவிகளை முதல்வர் விஜய் (CM Joseph Vijay) வழங்கினார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 16, 2026 அன்று கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர் கோவை பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 2, 2026 நேற்று புதுக்கோட்டை சென்ற முதல்வர் விஜய் அங்கு ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனதை் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த அவர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
இதையும் படிக்க : சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்.. உரிய அனுமதியின்றி இயங்கிய 87 ரிசார்ட்டுகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!




ரூ.3,000 கோடி வங்கிக் கடன்
பெருந்துறை காஞ்சிக்கோவில் சாலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்கவும் விரிவுபடுத்தவும் உதவும் வகையில், வங்கிகள் மூலம் ரூ.3,000 கோடி கடன் இணைப்பு உதவிகளை முதல்வர் வழங்கினார். இதன் மூலம் ஒவ்வொரு குழுவுக்கும் சுமார் ரூ.11.5 லட்சம் வரை கடன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கண்காட்சியில் பொருள்கள் வாங்கிய முதல்வர்
விழாவுக்கு முன்னதாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த பொருள்காட்சியை முதல்வர் ஆர்வத்துடன் பார்வையிட்டார். பெண்கள் தயாரித்த பொருள்களை அவர் பணம் கொடுத்து வாங்கினார். குறிப்பாக, தனது உருவம் பொறிக்கப்பட்ட கைத்தறிப் படுக்கை விரிப்புகளைப் பார்வையிட்ட அவர், அவற்றையும் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார்.
நிதியுதவி பெற்ற சுய உதவிக் குழுப் பெண்கள், முதல்வரிடம் ஹார்ட் சைகையைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வரும் அந்தச் சைகையைக் காட்ட, பெண்கள் மகிழ்ச்சியுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பலர் அவரிடம் கையெழுத்து பெற்று மகிழ்ந்தனர்.
இதையும் படிக்க : நடிகர் தனுஷின் ‘ஓம்’ பட இசை வெளியீட்டு விழா.. அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகள்!!
விழாவில், எம்ஜிஆர் செங்கோல் வழங்குவது போன்ற வடிவிலான நினைவுப் பரிசு முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டது. அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னதாக விஜயமங்கலம் சிப்காட் பகுதி வழியாக முதல்வர் விஜய் ரோடு ஷோ சென்றார். அப்போது வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் தவெகவவினர் முதல்வர் விஜசய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.