AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசின் தீபாவளி கிஃப்ட்.. கூட்டுறவு- போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

TN Govt Announce Diwali Bonus : தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், எவ்வளவு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

தமிழக அரசின் தீபாவளி கிஃப்ட்.. கூட்டுறவு- போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Nov 2026 21:52 PM IST

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் உபரித்தொகை இல்லாத கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையும், கூட்டுறவு துறையில் குறைந்த எண்ணிக்கை பணியாளர்கள் கொண்டு நிகர லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு 20 சதவீதம் போனஸ் தொகையும் வழங்கப்பட உள்ளது. அத்துடன், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

இதில், தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் கருணை தொகையும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வருவோருக்கு ரூ.2,400 கருணை தொகையும் வழங்கப்பட உள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 44 ஆயிரத்து 573 பணியாளர்களுக்கு ரூ. 49 கோடியே 69 லட்சம் போனஸ் தொகை மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதேபோல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

இதில், 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 21,333 பேருந்துகள் 10,172- க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலமாக குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட பொதுமக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் சுமார் 2.18 கோடி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதில், 72 சதவீதம் பயணிகள் கட்டணம் இல்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.

ரூ.167.12 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

எனவே, போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 1 ஆயிரம் பணியாளருக்கு 2025- 2026 ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதில், போக்குவரத்து கழக ஊழியர்களின் வங்கி கணக்கில் ரூ. 167.12 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!

Follow Us