AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாணவர்களுக்கு மொட்டை அடித்தாலும் தவறில்லை! அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சால் சர்ச்சை – சமூக வலைதளங்களில் கண்டனம்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் தோற்றம் மற்றும் சிகை அலங்காரம் குறித்து பேசிய அவர், இன்றைய மாணவர்கள் முடி வெட்டிக்கொண்டு வரும் விதத்தைப் பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு மொட்டை அடித்தாலும் தவறில்லை! அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சால் சர்ச்சை – சமூக வலைதளங்களில் கண்டனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2026 20:23 PM IST

நவம்பர் 2, 2026: பள்ளி மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டிக்கொண்டு வருவதாகவும், சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்தாலும் தவறில்லை என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முடி ஒழுங்காக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்துவிடுங்கள்:


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் தோற்றம் மற்றும் சிகை அலங்காரம் குறித்து பேசிய அவர், இன்றைய மாணவர்கள் முடி வெட்டிக்கொண்டு வரும் விதத்தைப் பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், சில மாணவர்கள் ரவுடிகளைப் போல முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதாகவும், பள்ளி மாணவர்கள் ஒழுங்கான முறையில் முடி வெட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். சரியாக முடி வெட்டாத மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் அவர்களுக்கு மொட்டை அடித்தாலும் தவறில்லை என்றும் தெரிவித்தார். மாணவர்களைத் தனது வீட்டுப் பிள்ளைகளாகக் கருதிக் கூறுவதாகவும், தவறான பழக்கங்கள் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு மாணவரின் தோற்றம் தான் தவறான எண்ணத்தை உருவாக்குகிறது

தொடர்ந்து, சில மாணவர்கள் கணுக்காலுக்கு மேல் பேண்ட் அணிந்து வருவதாகக் கூறிய அமைச்சர், இதனைப் பெற்றோர்கள் ஏன் அனுமதிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கி காவல் நிலையத்திற்குச் செல்லும்போது, அவர்களின் தோற்றத்தைப் பார்த்தே தவறு செய்தவர்கள் என காவலர்கள் கருதும் சூழல் ஏற்படுவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க: என் மகள் உயிருடன் வருவாள்.. தீபாவளி புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்.. செஞ்சியில் கண் கலங்க வைக்கும் சோகம்!

ஒருவரின் தோற்றம் அவரைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மாணவர்கள் தவறு செய்தார்களா என்பது விசாரணைக்குப் பிறகே முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

குவியும் கண்டனங்கள்


அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் சரியாக முடி வெட்டவில்லை என்றால் மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு அமைச்சருக்கு யார் அதிகாரம் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சொந்தக் கட்சி நிர்வாகிகளையே தொலைபேசியில் மிரட்டியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மாணவர்கள் குறித்தும் இத்தகைய தொனியில் பேசியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Follow Us