AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. வங்கிக் கணக்கும் முடக்கம்!

வீட்டு வேலை செய்யும் யாஸ்மினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘டிவிஎஸ் யாஸ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனத்தின் 2024–25ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வரியாக ரூ.4 கோடியே 75 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. வங்கிக் கணக்கும் முடக்கம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2026 11:48 AM IST

நவம்பர் 3, 2026: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடத்தாத நிறுவனத்தின் பெயரில் வரி நிலுவை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு வந்த நோட்டீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாபு நகரைச் சேர்ந்தவர் சையத் காதர் (38). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி யாஸ்மின் (33), வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் ‘டிவிஎஸ் யாஸ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனத்தின் 2024–25ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வரியாக ரூ.4 கோடியே 75 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்.. சொத்து குவிப்பு வழக்கில் தீவிரமடையும் விசாரணை!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு!

இதற்கிடையே, யாஸ்மினின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. தான் எந்தவொரு நிறுவனத்தையும் நடத்தாத நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்திருப்பதும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதும் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, யாஸ்மின் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை என்றும், தனது ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களை மர்ம நபர்கள் தவறாகப் பயன்படுத்தி, தனது பெயரில் போலியாக நிறுவனம் தொடங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ரூ.400 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷிடம் விடிய விடிய விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார்!

போலீசார் விசாரணை

எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது அடையாள ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீட்டு வேலை செய்து வரும் பெண்ணின் பெயரில் ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவை இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பது வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow Us