Duleep Trophy 2026: ஐபிஎல் சம்பவத்திற்கு பழிதீர்த்த உள்ளூர் கிரிக்கெட்.. சூர்யவன்ஷி அவுட்டான வீடியோ வைரல்!
Vaibhav Sooryavanshi Out: திரிபுரானா விஜய் ஆந்திரப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடுகிறார். விஜய் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் டெக்கலியில் பிறந்தார். அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் ற்றும் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் ஆவார். முதல் தர கிரிக்கெட்டில், விஜய் 16 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் 327 ரன்கள் எடுத்துள்ளார்.
துலீப் கோப்பை (Duleep Trophy 2026) இறுதிப் போட்டியில், ஒரு பழைய ஐபிஎல் நிகழ்வுக்கு வைபவ் சூர்யவன்ஷியை தென்மண்டல பந்துவீச்சாளர் பழிதீர்த்தார். அதாவது, திரிபுராணா விஜய் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே இந்த சம்பவம் நடந்தது. ஐபிஎல் தொடரில் விஜய்யின் ஓவரில் 18 ரன்களை அடித்த வைபவ் சூர்யவன்ஷி, இம்முறை விஜயின் சுழற்பந்தில் ஆட்டமிழந்தார். திரிபுராணா விஜய் வீசிய ஒரு சுழற்பந்து வீச்சினால், வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) முன்னோக்கி வர நேர்ந்தது. விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன் அவரை ஸ்டம்பிங் செய்தார். இதனால், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ALSO READ: கேப்டன் இஷான் கிஷனை வற்புறுத்தி டிஆர்எஸ்.. வைபவ் செயலால் பரிசாக கிடைத்த விக்கெட்!




விஜய் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026-ல் நேருக்குநேர் சந்தித்தனர். விஜய், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது ஐபிஎல் அறிமுகத்தை மேற்கொண்டார். சுவாரஸ்யமாக, அவரது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் ஓவரே வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக வீசப்பட்டது. அந்த ஓவரில் வைபவ், விஜய்யை சற்றும் இரக்கமின்றித் தாக்கி மூன்று பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்து 18 ரன்களை குவித்தார். அந்தப் போட்டியில் விஜய் மொத்தம் இரண்டு ஓவர்கள் பந்துவீசி, 29 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதுவே இதுவரை திரிபுராணா விஜய் ஆடிய ஒரே ஐபிஎல் போட்டியும் ஆகும்.
யார் இந்த திரிபுரானா விஜய்..?
Vaibhav Suryavanshi looked clueless 😭
After seeing the review of his dismissal, his reaction was like he knew he had made a big mistake with that shot. 😥 pic.twitter.com/LhSIZgfneu
— Mukku (@Cric_Mukku) September 9, 2026
திரிபுரானா விஜய் ஆந்திரப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடுகிறார். விஜய் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் டெக்கலியில் பிறந்தார். அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் ற்றும் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் ஆவார். முதல் தர கிரிக்கெட்டில், விஜய் 16 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் 327 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 14 கிரிக்கெட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 11 டி20 போட்டிகளில், அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 50 ரன்கள் எடுத்துள்ளார்.
துலீப் கோப்பையிலும் சிறப்பான செயல்பாடு
இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் மண்டலத்தின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்தார். திரிபுரானா விஜய் 42 ஓவர்கள் பந்துவீசி 180 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ALSO READ: துலீப் கோப்பை பைனல் டிரா-வா..? கோப்பை யாருக்கு?
துலீப் கோப்பையின் இறுதிப் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென் மண்டலம் தங்களது முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு ஆடிய கிழக்கு மண்டலம், தங்களது முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்து பிரம்மாண்டமாக விளையாடியது. இதனால், தென் மண்டலம் மீண்டும் பேட்டிங் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. இதற்கிடையில், கிழக்கு மண்டலத்தின் இரண்டாவது இன்னிங்ஸில், வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களில் திரிபுரானா விஜயால் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.