Tamil Nadu Weather report: செப்டம்பர் 12 அன்று இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather today : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செப்டம்பர் 9, 2026 இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 12, 2026 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 9 : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செப்டம்பர் 9, 2026 இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 12, 2026 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பாரக்கலாம்.
செப்டம்பர் 12 அன்று இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 9, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைவது உறுதி.. எந்த இடத்தில் தெரியுமா.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!




மேலும் செப்டம்பர் 10, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11, 2026 அன்று கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12, 2026 மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தவெக வேட்பாளர்கள்… இந்த இருவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு.. நாளை பட்டியல் வெளியீடு?
சென்னை மற்றும் அதன் புற நகரைப் பொறுத்தவரை செப்டம்பர் 9, 2026 இன்றும் மற்றும் செப்டம்பர் 10, 2026 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.