நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Mookuthi Amman 2 Movie Release Update | இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் நடிகை நயன்தாரா நடிப்பில் டாக்ஸிக் மற்றும் ஹாய் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் ஹாய் படத்தில் அவர் நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் எப்போது?
அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி நடிகை நயன்தாரா நடித்து உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… அஜித் குமார் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் – நடிகர் சூரி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SundarC’s directorial, Nayanthara-starrer #MookuthiAmman2 is being planned for a Diwali release by Vels Film International.
The first part of #MookuthiAmman, starring #Nayanthara and directed by RJ Balaji, was also released during the Diwali season on JioHotstar. Following… pic.twitter.com/b0I9EiFMV0
— Movie Tamil (@_MovieTamil) September 8, 2026
Also Read… அந்த படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாதது வருத்தமாக இருந்தது – நடிகர் அசோக் செல்வன்