AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 Vs ஓம்.. ஜெயிலர் 2 படத்துடனான மோதலை தனுஷ் தவிர்க்காததற்கு காரணம் இதுவா?

Jailar 2 Vs Om Clash: 2026ம் ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் டாப் தமிழ் படங்கள்தான் ஜெயிலர் 2 மற்றும் ஓம். இந்த படங்களானது ஒருநாள் இடைவெளியில் வெளியாகும் நிலையில், ஓம் படம் தேதியை மாற்றாமல் இருக்க காரணம் என்ன என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

ஜெயிலர் 2 Vs ஓம்.. ஜெயிலர் 2 படத்துடனான மோதலை தனுஷ் தவிர்க்காததற்கு காரணம் இதுவா?
ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்பட மோதல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Sep 2026 21:02 PM IST

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து கலக்கிவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கூலி (Coolie). லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்கு பின் இவர் இணைந்த 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இதை ஜெயிலர் 1 படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் இயக்கியிருக்கிறார். சன் பிக்ச்சர் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அந்த வரிசையில் இப்படம் வெளியான மறுநாளில் தனுஷ் (Dhanush) நடித்துள்ள ஓம் (Om) படமும் வெளியாகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்துடன் ஓம் படமானது வெளியாக என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைராகிவருகிறது.

இதையும் படிங்க: தனி ஒருவன் 2 – மிருதன் 2 படங்கள் குறித்து அப்டேட் கொடுத்து நடிகர் ரவி மோகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்துடன் ஓம் படம் மோத இதுதான் காரணமா?:

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதியில், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படம் வெளியான மறுநாள் (16/10/2026) தனுஷின் ஓம் படம் வெளியாகிறது. ஆரம்பத்தில், அவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை விரும்பாததால், 2026 தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: வீட்டு தலைவரை எதிர்க்கும் போட்டியாளர்கள்.. லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த சம்பவம் – பிக் பாஸ் 10 2-வது நாளில் வெடித்த சண்டை!

இருப்பினும், ராமாயணம் திரைப்படம் சோனி நிறுவனத்தின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 6,000 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓம் படத்திற்கு வெளிநாட்டு சந்தைகளிலும், தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பிற மாநிலங்களிலும் திரையரங்குகளைப் பெறுவது கடினமாகலாம். இதனால் இந்த முடிவை ஓம் படக்குழு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 மற்றும் ஓம் பட ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:

2026ம் ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் பிரம்மாண்ட திரைப்படங்கள்தான் ஓம் மற்றும் ஜெயிலர் 2. இந்த இரு படங்களும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் முன் பின் வெளியாகிறது. இந்நிலையில் இதில் எந்த படம் வெற்றியாகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us