தனி ஒருவன் 2 – மிருதன் 2 படங்கள் குறித்து அப்டேட் கொடுத்து நடிகர் ரவி மோகன்!
Ravi Mohan talks about part 2 movies | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் உருவாக உள்ள இரண்டாம் பாக படங்கள் குறித்து நடிகர் ரவி மோகன் பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் தற்போது கராத்தே பாபு, ஜீனி மற்றும் ப்ரோ கோட் ஆகியப் படங்கள் வரிசையாக உருவாகி உள்ளது. இதில் கராத்தே பாபு மற்றும் ஜீனி படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. இந்த நிலையில் அடுத்ததாக ப்ரோ கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை நடிகர் ரவி மோகனே அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தயாரிப்பாளராக மட்டும் இன்றி இயக்குநராகவும் வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன்.
அதன்படி தற்போது இயக்குநர் ரவி மோகன் இயக்கத்தில் அன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து உள்ள நிலையில் கெனிஷா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். தொடர்ந்து ரவி மோகன் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனது படங்களின் பார்ட் 2 குறித்து அப்டேட் கொடுத்து ரவி மோகன்:
இந்த நிலையில் ரவி மோகன் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவரது நடிப்பில் உருவாக உள்ள பார்ட் 2 படங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரவி மோகன், தனி ஒருவன் 2 படத்தின் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் மிருதன் 2 படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் தற்போது தங்கள் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கான திரைக்கதைகளை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இப்பணிகளை நிறைவு செய்வார்கள். அதன்பிறகு, ஒரு நல்ல நாளில் இத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை நான் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம்… முதல்வர் விஜயை சந்தித்த தந்தை சந்திரசேகர் – தாய் ஷோபா!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Both #ThaniOruvan2 director #MohanRaja and #Miruthan2 director #ShakthiSoundarRajan are currently writing the scripts for their respective sequels. They’ll be completing them soon, and after that, I’ll announce the projects on an auspicious day.
— #RaviMohan…— Movies Singapore (@MoviesSingapore) September 8, 2026
Also Read… அந்த ஹீரோக்களுடன் படம் பண்ண முயற்சி பண்ணேன் – பி.எஸ்.மித்ரன் ஓபன் டாக்!