AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்த அழகான பயணத்தில் ஒரு அங்கமாக இருந்தது…. சில்லுனு ஒரு காதல் படம் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர்

20 Years Of Sillunu Oru Kaadhal Movie | நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

அந்த அழகான பயணத்தில் ஒரு அங்கமாக இருந்தது…. சில்லுனு ஒரு காதல் படம் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர்
சில்லுனு ஒரு காதல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2026 16:14 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஓபெலி என். கிருஷ்ணா. ஒவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார். அதன்படி இயக்குநர் ஓபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஓபெலி என். கிருஷ்ணா இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகைகள் ஜோதிகா மற்றும் பூமிகா இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சில்லுனு ஒரு காதல் படம் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர்:

இந்த நிலையில் சில்லுனு ஒரு காதல் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில் படத்தின் இயக்குநர் ஓபெலி என். கிருஷ்ணா தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோவையும் அந்தப் பதிவில் இயக்குநர் ஓபெலி என். கிருஷ்ணா இணைத்து உள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கிளாடியேட்டர்ஸ் தீபாவளிகா? அஜித்தின் ஆவணப்படம் ரிலீஸ் அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!

சில்லுனு ஒரு காதல் படம் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர்:

Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!

Follow Us