தமிழ் சினிமாவின் உண்மையான எண்டர்டெயினர் கே.எஸ்.ரவிக்குமார்… கொண்டாடும் ரசிகர்கள்!
36 Years Of KS Ravikumar | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது 36 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
பான் இந்திய மொழிகளில் சமீப காலமாக படங்களில் கேமியோ என்பது மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த கேமியோ என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் மிகப் பெரிய பங்காற்றியவர் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07-ம் தேதி திரையரங்குகளில் வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கன்னட மொழியில் வெளியான டர்கா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்குநராக இயக்கும் பெரும்பாலான படங்களில் அவர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் இயக்குநராக மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ரூலர் என்ற படத்தினை இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.




தமிழ் சினிமாவின் உண்மையான எண்டர்டெயினர் கே.எஸ்.ரவிக்குமார்:
தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வரும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது இன்றுடன் 36 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இத்தனை ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது மாரி செல்வராஜின் மஞ்சனத்தி படம் – தொடங்கி வைத்தார் இசைஞானி இளையராஜா!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
தமிழ் சினிமாவில் Entertainment-ஐ ஒரு தனி Signature-ஆக மாற்றிய இயக்குநர்! 👑
புரியாத புதிர் தொடங்கி, சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தெனாலி, சாமி, தசாவதாரம், வரலாறு, லிங்கா என…
ஒவ்வொரு படத்திலும் குடும்ப உணர்வுகள், காமெடி, ஆக்ஷன், எமோஷன், மாஸ் &… pic.twitter.com/V6iZoO8eZH— cinema cinema (@kailashsatana) September 7, 2026
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்… பார்ட் 2 கேட்கும் ரசிகர்கள்!