Bigg Boss Tamil 10 Live: பிக்பாஸ் 10வது சீசன்.. போட்டியாளர்கள் யார் யார்?
Bigg Boss Tamil Season 10 Live Updates: ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ். இது பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பான நிலையில் தமிழிலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் களம் கண்டது. தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ், 10வது சீசனை தொடுகிறது. இன்று தொடங்கவுள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த நேரடி தகவல்களை இங்கே காணலாம்.
LIVE NEWS & UPDATES
-
4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்
கிட்டத்தட்ட 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் நடிகை ஷாபி ஷபனம், விமர்சகர் பிரஷாந்த், கவிதா மோகன் மற்றும் சீரியல் நடிகை அக்ஷிதா போன்ற பிரபலங்கள் நிகழ்ச்சியில் மேடையிலே ஆடியன்ஸின் ஓட்டினால் வெளியேற்றப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது
-
BiggBoss Tamil : இந்த முறை இப்படியா?
எந்த சீசனிலும் இல்லாத மாதிரியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மேடையிலே போட்டியாளர்கள், அங்குள்ள ஆடியன்ஸின் வாக்கின் படி வெளியேற்றப்பட்டுளார்களாம்.
-
ஜாய் கிரிசில்டா மறுப்பு
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், அதில் கலந்துகொள்வதை முழுவதுமாக மறுத்துள்ளார். மேலும் தனக்கு பிக் பாஸை விடவும் தனது குழந்தைதான் முக்கியம் என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil Season 10 Live: தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ஸின் பத்தாவது சீசன், பிரம்மாண்டமாகத் தொடங்கத் தயாராக உள்ளது. 10வது சீசன் என்ற இந்த மைல்கல் சீசனுக்காக தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனில் உள்ளே வரப்போகும் நபர்கள் யார் யார் என்பதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி ஸ்டார் மா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களில் ஒளிபரப்பப்படும். விஜய் டிவியிலும் காணலமா. பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்டமான தொடக்க எபிசோட் செப்டம்பர் 06 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். வழக்கமான தினசரி எபிசோடுகள் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் வார இறுதி (சனி மற்றும் ஞாயிறு) சிறப்பு எபிசோடுகள் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
Published On - Sep 06,2026 3:00 PM