AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்… பார்ட் 2 கேட்கும் ரசிகர்கள்!

3 Years Of Jawan Movie | கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி இந்தி சினிமாவில் இயக்கி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜவான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.

3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்… பார்ட் 2 கேட்கும் ரசிகர்கள்!
ஜவான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2026 14:22 PM IST

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் வரிசையாக வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கோலிவுட் சினிமாவில் இயக்கி வந்த இயக்குநர் அட்லி இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன படம் ஜவான். இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மேலும் இந்த ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்து இருந்தார். இவர் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் இவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியகாவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்:

இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றார் இயக்குநர் அட்லி. மேலும் இந்தப் படத்தில் நடித்தற்காக நடிகர் ஷாருக்கானிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதுதான் நடிகர் ஷாருக்கானின் முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுக்குமாறு கேட்டு வருகின்றனர். மேலும் இரண்டாம் பாகம் வருமா இல்லையா என்பது குறித்து படக்குழுதான் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sai Pallavi: மாரி 2 படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷ் என்ன அப்படி சொல்லிட்டாரு – சாய் பல்லவி பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!

Follow Us