AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று முதல் நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார கேப்டனுக்கான போட்டி நடைபெறுவது தெரிகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2026 10:45 AM IST

இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி மொழியில் அதற்கு முன்பு பல வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்து இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகே தமிழக மக்கள் பலரிடையே இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் ஒரு ரியாலிட்டு ஷோவாக வலம் வருகின்றது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் மற்றும் காமென் மேன்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 4 வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்?

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு தற்போது முதல் நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்திற்கான கேப்டன் தேர்வு நடைபெறுவது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கேப்டனுக்கான போட்டியில் போட்டியாளர்கள் சாத்விகா, ஷாமா, முத்தழகி, வினோத் பாபு மற்றும் ஜான்சன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இதில் சாத்விகா மற்றும் வினோத் பாபு இருவருக்கும் இடையே அதிக போட்டி நிழவுகிறது. மேலும் இந்த வார கேப்டனாக யார் தேர்வாவார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us